'June. R'

உனக்குக் காத்திருப்பதே
என் வழக்கில்லை
வாழ்வாயிற்று.
நீ இருப்பாய், இல்லாமலும் இருப்பாய்
நீ வருவாய், வராமலும் போவாய்
உன் இருப்பு என் இருப்பு
என்று சொன்னாலும்
கண்ணில் காட்டாதவரை
நம்ப மறுக்கும் ஊருக்கு
நான் என்ன பதில் சொல்ல?
உனக்கும் எனக்கும்
உறவில்லை என்பது ஊர் பேச்சு.
இருக்கலாம்,
பிறக்கும் போதே
பிரித்துத்தானே
போடுகின்றனர்
இவ்வுகலத்தார்.
யாரைச் சேரவிட்டார்?
சேர்ந்திருந்த போழ்திலும்
சேராத எண்ணங்கள்
வழக்கங்கள்
வழக்குகள்.
சரி, விடு அதை!
நான் அனாதையா என்று
சொல்லவாவது
நீ வரலாமில்லையா?
ஏங்குவது என் வாடிக்கை இல்லை
வாழ்வாகிப்போனது இங்கே!
ஆனால்...
நீ அங்கேயே இரு
அங்கு வந்து காண்கிறேன்
ஓர் நாள்.

3மறுமொழிகள்:

Wed Mar 08, 04:28:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger வண்டார்குழலி

இந்த ஏங்குவது என்பதே ஒரு சுகம்தான்!

ஜூன் ஆர் இதற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?!

 

Wed Mar 15, 02:44:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger வசந்தன்(Vasanthan)

நானும் ஏதோ படத்தின் விமர்சனமாக்குமெண்டு வந்தேன்.

 

Tue Mar 28, 01:35:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger நா.கண்ணன்

கவிதைக்கும் ஜூன்-ஆர் படத்திற்கும் உணர்வில் தொடர்புண்டு!

 

Post a Comment

<< முகப்பு